செய்தி:
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்!
கோவிந்த் கமெண்ட்:
ஒரு வழியாக அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்துவந்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஈரான் இதுவரை அடைத்து வைத்திருந்த ஹார்முஸ் ஜலசந்தி பாதையும் திறந்துவிடப்பட்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் சிறிதுகால இடைவெளிக்குப் பிறகு சிக்கல்கள் இல்லாமல் வரமுடிந்திருக்கிறது.
இவ்வளவெல்லாம் நடந்தும் இங்குள்ள பெட்ரோல், டீசல் விலை கொஞ்சமாவது குறையுமா? என்பதுதான் சராசரி இந்தியனின் எதிர்ப்பார்ப்பு.