அ.மாதவையா: நினைவுகூரப்படவேண்டிய இலக்கிய முன்னோடி!

தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.

நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றிபெற்றாராம்.

குற்றால அருவியின் உச்சியை 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

இந்தியக் கும்மி என்ற கவிதைப் போட்டி 1914 ஆம் ஆண்டில் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார்.

அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்கவேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்.

பேசிமுடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே அக்டோபர் 22 ஆம் தேதியன்று உயிர்பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.

தமிழ் இலக்கிய வெளியில் எப்போதும் நினைவுகூரப்படவேண்டிய எழுத்துக் கலைஞன் மாதவையா.

You might also like