கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!

எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது.

எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர் கடைபிடித்த தூய்மை தான்.

காமராஜர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரை இன்றுவரை ‘அரசியல் தூய்மை’க்கு உதாரணமாக கூறுகிறோம் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்திருக்க வேண்டும் என்ற மாபெரும் பெருமைக்குரியவர் கக்கன்.

ஒருமுறை கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த சமயம். கக்கனின் தம்பி திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு காவல் துறையில் சேர விருப்பம்.

சிறந்த ஓட்டப்பந்தய வீரரும்கூட. அவருக்கு காவல்துறையில் சேர அழைப்பும் வந்தது.

ஆனால், கக்கன் அவர்களோ விஸ்வநாதனிடம், “காவல்துறை என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. நீ நேர்மையான முறையில் தேர்வாகியிருந்தாலும், என்னுடைய சிபாரிசில்தான் உனக்கு இந்த வேலை கிடைத்தது என்று கூறுவார்கள். அதனால் இந்த வேலை உனக்கு வேண்டாம்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

மேலும், ஐ.ஜி அருளை அழைத்து, “என் தம்பிக்கு 2 விரல்கள் சரியாக வேலை செய்யாது. அவனால் துப்பாக்கியெல்லாம் இயக்க முடியாது. நீங்கள் சரியாக தேர்வு செய்யவில்லை” என்றுகூறி அந்த ஆர்டரையே ரத்து செய்ய வைத்துவிட்டார்.

– வினோத் குமார்

  • நன்றி : பாமரன் கருத்து இதழ்
 
vels
You might also like