நூல் அறிமுகம்:
கோ.கேசவன் – மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். இவரிடம் 49 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழியல் உயர் கல்வியாகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகக் கலைத்திட்ட உருவாக்கப் பணிகளில் பங்கு கொண்டவர்.
எழுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல்துறை சார்ந்த முப்பது குறுநூல்கள் இவர் பெயரில் வெளிவந்துள்ளன. தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர்.
நூல் தொகுப்புகள்:
1. தமிழ்ச் சமூக வரலாறு (இலக்கியம்), 2. தலித்தியம், 3. மார்க்சியம்.
தோழர் கோ.கேசவன், 25 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளராகவும் இயக்கப் போராட்டங்களை முன்னின்று நடத்துபவராகவும் இருந்தவர்.
சிறந்த கட்டுரையாளர்; நூலாசிரியர்; மேடைப் பேச்சாளர்; மொழி பெயர்ப்பாளர்; தொகுப்பாசிரியர்; பாரதியின் படைப்புகளில் அரசியல் பின்னணி என்ற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர் இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள் முப்பத்திரண்டு.
******
நூல்: இந்திய இலக்கிய சிற்பிகள் – கோ.கேசவன்!
ஆசிரியர்: பேராசிரியர் வீ.அரசு
சாகித்திய அகாதெமி நிறுவனம்
விலை: ரூ. 48/-