சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு!

அக்டோபர் 5 – உலக ஆசிரியர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ அமைப்பால் 1994-ம் கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை.

ஆசிரியர்களை பெருமைபடுத்தும் சில 

அறிவையும், மனிதநேயத்தை வளர்க்கும் ஆசிரியர்களே ஒரு தேசத்தின் உண்மையான கட்டமைப்பாளர்கள்.

ஒரு தேசத்தின் அதிக வலிமைமிக்கவர்கள் ஆசிரியர்களே! அவர்கள் நல்ல மாணவர்களை உருவாக்குகிறார்கள்… நல்ல மாணவர்கள் சிறந்த நாட்டை உருவாக்குகிறார்கள்.

ஒரு ஆசிரியர் என்பவர் அறிவை வளர்ப்பவர் மட்டுமில்லை. ஒரு மாணவனின் உள்ளத்தில் இருக்கும் வலிகையை வெளிகொண்டு வருபவர்.

ஆசிரியர் என்பவர் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பி ஆவார்.

கல்வியின் மூலம் மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, வாழ்வியலை போதித்து குணநலங்களையும் வடிவமைப்பவர் ஆசிரியர்.

ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர் ஆசிரியர். ஒரு சிறந்த ஆசிரியர் நினைத்தால், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம்.

கல்வி என்னும் அறிவின் விளக்கை, மாணவர்களின் உள்ளத்தில் ஏற்றி, அவனின் வாழ்க்கையை ஒளிர வைப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஆசிரியரின் வழிகாட்டுதலே ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. 

வாழ்க்கையில் நாம் பெற்ற பெரும் செல்வங்கள்.. தாய், தந்தை மற்றும் ஆசிரியர்.

ஒவ்வொருவரின், வாழ்க்கையையும் வெளிச்சமாக்கி தருபவர்கள் ஆசிரியர்கள்.

– ஜான்வி

நன்றி: சமயம் இணையதளம்

You might also like