பெற்றோரின் அணைப்பில் இளம் சூர்யா!

நடிகர் சிவகுமாரின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான சூர்யா ‘நேருக்கு நேர்’ படம் தொடங்கி பல இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் வசூலில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வரும் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி, இன்று காலை முதலே அவருக்கு வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை நட்சத்திரங்களும், தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

குறிப்பு: சிவகுமாரும் அவரது மனைவி லட்சுமியும் சூர்யாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடியபோது, எடுக்கப்பட்ட புகைப்படம்.

#சூர்யாபிறந்தநாள் #actorsurya #suryasbirthday #லட்சுமி #இயக்குனர்வெங்கிஅட்லூரி #venkialoori #நடிகர்சிவகுமார் #sivakumar #actorsivakumar #சிறுத்தைசிவா #siruthaisiva #கங்குவா #ganguva #surya #suriyabirthday #suriyafans #tamilcinema #kollywood #suryanewmovie

You might also like