தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று தவெக தலைவரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்பட ரிலீஸ் தொடர்பானது.
முதலில் சென்சார் போர்டில் பிரச்சனை. பிறகு நீதிமன்றம் சென்று அங்கும் கால தாமதம்.
‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தேதியெல்லாம் அறிவிக்கப்பட்டு, டிக்கெட்டுகள் கூடுதலான விலைக்கு முன்பதிவு செய்யப்பட்டு, விஜய்யின் ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.
பிறகு, யாரும் எதிர்பாராத விதமாக ‘ஜனநாயகன்’ படம் முதலில் துண்டுத் துண்டாகவும், பிறகு முழு படமாகவும் இணையதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
எங்கிருந்து அந்தத் திரைப்படம் லீக் ஆனது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து, எடிட்டிங்க் பொறுப்பில் இருந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்து விட்டார்.
இனியும் ‘ஜனநாயகன்’ படம் அதிகாரபூர்வமாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வெளியாவதில் என்ன தடை?
‘ஜனநாயகன்’ அதிகாரபூர்வமாக திரையரங்கிற்கு வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
சு. சுரேகா