திருக்குறளில் முதலில் காமத்துப் பாலைப் படிக்க வேண்டும்!

கவிஞர் வைரமுத்து கருத்து

திருக்குறளை இளைஞர்கள் படிக்கிற போது முதலில் காமத்துப்பாலில் இருந்து தொடங்கவேண்டும்.

ஏனெனில் காதல் எத்தன்மையது அதை எப்படி அணுகுவது, காதலால் இருவரும் எப்படி சேர்ந்து இருப்பது, ஊடலை எதிர்கொள்வது போன்றவற்றை அறிந்து காதலித்து காதலில் முதிர்ச்சி அடையலாம்.

பிறகு பொருட்பால் அதாவது பொருளீட்டும் முறைகள். பொருளின் முக்கியத்துவம். இங்கு பொருள் என்பது வருவாயைக் குறிக்கும்.

கடைசியாக அறத்துப்பால் அறம் செய்வது. சேர்த்த பொருளை தான் மட்டுமே அனுபவிக்காமல் பிறருக்குக் கொடுத்து உதவுதல்.

இதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் வயதுக்கு ஏற்றவாறு திருக்குறளையும் பகுத்துக் கொண்டு அதன்படி வாழலாம். இதுதான் சரியாகவும் இருக்கும்.

இது என் குருநாதர் எனக்குச் சொன்னது நான் உங்களுக்குச் சொல்கிறேன் என் சகாக்களே.

அந்த வகையில் கவிஞரின் காமத்துப்பால் உரை காதலின் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முக்கியமாக காதல், இனக்கவர்ச்சி ஆகியவற்றிற்கான வித்தியாசத்தினை பதின் பருவத்தினர் அறிந்து கொள்ள வேண்டும்.

– கவிப்பேரரசு வைரமுத்து

You might also like