செய்தி:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் என்பதால், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம்!
– மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
சங்கம் வளர்த்த மதுரை என்பது உயர்நீதிமன்றத்திற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அங்குள்ள அறநிலையத்துறைக்குத் தெரியவில்லையா?
தமிழகத்தில் தமிழில் குடமுழுக்கு செய்வதைக்கூட உயர்நீதிமன்றம் சொல்லித்தான் செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா?