நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்கள்!

– தலைமைச் செயலர் இறையன்பு கடிதம்

நீதிமன்றங்கள் பல வழக்குகளில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தும் அரசு தரப்பில் அவற்றைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டன.

இந்த நிலையில், தமிழக அரசின் பல்துறைச் செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் தமிழக அரசின் தலைமைச் செயலரான வெ.இறையன்பு.

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும், அப்படி நிறைவேற்றப் படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இறையன்பு.

இந்தக் கடிதம் நீதிமன்றத்திலும் சேர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
*

You might also like