காவல் மரணங்கள் எப்போது முடிவுக்கு வரும்?

செய்தி:   

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை!

– சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.

கோவிந்த் கமெண்ட்: 

காவல் மரணங்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதிமுக ஆட்சியில், சாத்தான் குளம் சாட்சியாக இருப்பதைப் போலவே திமுக ஆட்சியில் மடப்புரம் சாட்சியாக இருந்திருக்கிறது.

தற்போது, தவெக ஆட்சியிலும் அதே மாதிரி ஒரு கொடுமையான தாக்குதல் நடந்து உயிரிழப்பு வரை சென்றிருக்கிறது.

ஆக, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளோ, சிறைத்துறை அதிகாரிகளோ இதேமாதிரியான கொடுஞ்செயலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இம்மாதிரியான நிகழ்வுகளை தடுக்க முடியும். அதை தற்போதைய முதல்வரான விஜய் முதலில் செய்யட்டும்.

You might also like