பொதுவுடமைக் கட்சியின் வாக்குமூலம்!

செய்தி:   

தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம்.

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரபரப்பு கருத்து.

கோவிந்த் கமெண்ட்: 

ஆட்சிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆதரித்தோம் என்று முதலில் ஒரு காரணத்தைச் சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி.

இந்நிலையில், இப்படி ஒரு காரணத்தை தற்போது சொல்லியிருக்கிறது அதே மார்க்சிஸ்ட் கட்சி.

அவர்களுடைய மொழியிலேயே சொன்னால், அடிக்கடி தன்னை சுய பரிசோதனை பண்ணிக்கொள்வார்கள் போலிருக்கிறது.

You might also like