அமைதிப் புரட்சியால் மாற்றத்தை ஏற்படுத்திய விஜய்!

சபாநாயகர் புகழாரம்

எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசியவை:

“17-வது சட்டப்பேரவையில் 146 புதிய எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். நல்ல அரசு அமைந்துள்ளது.

தான் போட்டியிட்ட இடமெல்லாம் வெற்றி பெறும் இடமாக மாற்ற முடியும் என்பதை தேர்தல் களத்தில் நிரூபித்துக் காட்டியவர் முதலமைச்சர் விஜய்.

தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது.இது ஒரு புதிய மாடல் அரசு; விஜய் மாடல் அரசு.

என்ன ஆகுமோ, ஏதாகுமோ என கவலையில் இருந்த மக்களுக்கு, ஒரு புன்னகையால் கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்த மாபெரும் தலைவர் முதலமைச்சர் விஜய்.

‘நான் அதிகம் பேச மாட்டேன்; ஆனால் அமைதியான ஒரு புரட்சியைச் செய்வேன். அந்தப் புரட்சி மக்களுக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்’ என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்.

இந்த சட்டப்பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சட்டங்களும் இந்தியாவின் பல மாநில சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளன.

இந்தியா வியந்து பாராட்டும் பல திட்டங்களை தமிழகம் வழங்கியுள்ளது. அந்த வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர் முதலமைச்சர் விஜய்.

நீங்கள் அதிகமாக பேச மாட்டீர்கள். ஆனால், உங்களிடம் கருத்துகளை முன்வைக்க வருபவர்கள் யார், செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை அறிந்து,

அவற்றை உடனடியாக நிறைவேற்றும் ஆற்றல் உங்களிடம் உள்ளது என்பதைக் கடந்த 40 நாட்களில் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றை உறுப்பினர்கள் நூலகத்திற்குச் சென்று படிக்க வேண்டும்.

சட்டப்பேரவை நடைமுறைகள் மற்றும் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள்.”

–  வைஷ்ணவி பாலு

You might also like