செய்தி:
சென்னை ராயபுரம் அருகே, குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் ரூ.20 கோடி வரை மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம்.
கோவிந்த் கமெண்ட்:
ஒருபுறம் மேற்காசியப் போரின் பின்விளைவாக தங்கத்தின் விலை சமச்சீராக இல்லை. சராசரி மக்கள் வாங்கும் படியாகவும் இல்லை.
இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பெண் காவலர் ஒருவரே போலித் தங்க மோசடியில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் சுருட்டி இருக்கிறார் என்றால் ஏமாற்றியவரை மட்டுமல்ல, ஏமாந்தவர்களையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது?