PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!

மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது.

குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு மானியச் செலவினத்தை சீரமைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை நாடு முழுவதும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு பொருந்தும்.

இதனால் PMUY திட்டப் பயனாளிகள் பாதிக்கப்பட உள்ளனர்.

இதற்கு முன்பு வருடத்திற்கு 9 மானிய சிலிண்டர்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே ரூ.300 மானியம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் வாங்கிய பிறகு, மானியத் தொகை வழக்கம் போல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சு. சுரேகா

You might also like