ரீல்ஸ் பார்க்கும் இளம் தலைமுறைக்கு ஒரு வேண்டுகோள்!

பிரமர் மோடி அறிவுரை

முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் எழு​தி​யுள்ள, ‘இந்​தி​யக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்​கை, என் போராட்​டங்​கள்’ என்ற சுயசரிதை புத்தக வெளி​யீட்டு விழா டெல்லியில் உள்ள விஞ்​ஞான் பவனில் (12.08.2026) நடைபெற்றது.

விழா​வில் பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நூலை வெளி​யிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்நாத் கோவிந்​தின் சுயசரிதை இந்​திய ஜனநாயகத்​தின் பாரம்​பரிய அடை​யாள​மாக மாறும்.

வரும் தலை​முறை​யினர் அதிலிருந்து கற்​றுக்​கொள்ள வேண்​டிய விஷ​யங்​கள் ஏராள​மாக உள்​ளன.

இளைய தலைமுறையினரிடம் ஒரு வேண்​டு​கோள். இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடகப் பிரபலங்​கள் உங்​களை வேறு திசை​யில் ஈர்த்து உங்​களது கவனத்தை சிதறடிக்​கக்​கூடும்.

குறுக்கு வழியைத் தேடிப் போகும் இந்​தக் கால​கட்​டத்​தில் ரயில் நிலை​யங்​களில் எழுதப்பட்டிருக்​கும் ஒரு விஷ​யத்தை நாம் நினை​வில்கொள்ள வேண்​டும்.

குறுக்​கு ​வழிகள் உங்​கள் வாழ்வை சீரழித்து விடும். இளைஞர்​களே நீங்​கள் குறுக்கு வழியைத் தேர்ந்​தெடுக்க விரும்​பி​னால் உங்​களுக்குப் பிடித்தமானவர்களின் சுயசரிதையைப் படி​யுங்​கள்.

சுயசரிதைகளைப் படித்து மற்​றவர்​களின் போராட்​டங்​களி​லிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்​டும்.

குடியரசுத் தலை​வர் பதவியி​லிருந்து வில​கிய பின்​னரும் கோவிந்த் ஓய்வெடுக்கவில்​லை. 

இந்​திய ஜனநாயகத்தை வலுப்​படுத்​து​வ​தில் அவர் தொடர்ந்து பங்​களிப்பை வழங்கி வருகிறார்.

அவரது சுயசரிதையை இளைஞர்​கள் அனை​வரும் கட்​டா​யம் படிக்க வேண்​டும். ராம்​நாத் கோவிந்த் தனது புத்​தகத்​தில் அவரது தாயார் குறித்து எழு​தி​யுள்​ளார்.

வீட்​டில் ஏற்​பட்ட தீ விபத்​தால் அவரது தாயார் எப்​படி இறந்​தார் என்​பதைக் குறிப்பிட்டுள்ளார். அவரது வலியை உணர்​கிறேன். 

எனது தாயார் 100 ஆண்​டு​கள் வரை வாழ்ந்து என்னை ஆசீர்​வ​தித்​துச் சென்றார். ஆனாலும், அவர் இல்​லாத வெற்​றிடத்தை இப்​போதும் நான் ஆழமாக உணர்கிறேன்.

ஒரு​வரின் மன உறுதி எப்​படிக் கடின​மான சூழல்​களைக் கடந்து மிக உயர்ந்த அரசியலமைப்​புப் பதவிக்கு உயர உதவும் என்​பதை ராம்​நாத் கோவிந்​தின்​ வாழ்க்கை நமக்கு காட்​டு​கிறது” என்றார்.

You might also like