விலை உயர்வு எழுதுபொருட்களுக்கு மட்டுமா?

செய்தி:

பள்ளிகள் திறந்த நிலையில் எழுது பொருட்களின் விலை 20% வரை உயர்வு!

– இஸ்ரேல் ஈரான் போர் காரணம் என வியாபாரிகள் கருத்து.

கோவிந்த் கமெண்ட்:

மேற்காசியப் போர் துவங்கினாலும் துவங்கியது பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட சகல பொருட்களின் விலையும் கூடி சாதாரண குடிமகன் நம்மூர் டீக்கடையில் குடிக்கிற டீ, போண்டா விலை கூட உயர்ந்துவிட்டது. 

அதிலும் ஓட்டல்களில் விலை எகிறி வருகிறது.

இந்த நிலையில் பள்ளியில் எழுது பொருட்களின் விலை கூடியிருப்பதாக தகவல் வருவதில் வியப்பொன்றும் இல்லை.

போரின் எதிரொலியாக இப்படிப்பட்ட பின்விளைவுகளை பல்வேறு நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. 

You might also like