அதிகார மோதலாக மாறிய அரசு விழா!

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க நகர் மண்டலத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின்போது, மேயர் பிரியா தன்னிடம் இருந்த மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் வழங்காமல் கல்வித்துறை இணை ஆணையரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதை அவமரியாதையாகக் கருதிய, திரு.வி.க நகர் தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவி நிகழ்விடத்திலிருந்து வெளியேறியதால் சர்ச்சை வெடித்தது.

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் தனக்கு மரியாதையும் முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்று எம்எல்ஏ பல்லவி குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில், நிகழ்ச்சி நெறிமுறைகளின் (Protocol) அடிப்படையிலேயே செயல்பட்டதாக மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.

இதுவே இரு தரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாக அமைந்தது.

இதற்கிடையே, மற்றொரு பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா மெழுகுவர்த்தியை பல்லவியிடம் வழங்க முயன்றபோது, அவர் அதை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு தரப்பினரும் செய்தியாளர்களிடம் தங்களது விளக்கங்களை வழங்கியதால் இந்த விவகாரம் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

– சு. சுரேகா

You might also like