செய்தி:
பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!
– சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து.
கோவிந்த் கமெண்ட்:
தமிழக முதல்வராக தவெக தலைவரான விஜய் பதவியேற்றதும் வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமரான மோடி.
சம்பரதாய மரபு கருதி மாநிலத்திற்கான மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளோடு, டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்யை முதலில் பிரதமர் அரை மணி நேரம் சந்தித்துப் பேசுவார் என்றார்கள். பிறகு 20 நிமிடம் சந்திப்பு என்றார்கள்.
கடைசியில் மிக குறுகிய நேரமாக பத்து நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
இதிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க பிரதமர் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதையும் தமிழ்நாட்டுக்கான முக்கியத்துவம் எவ்வளவு என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேமாதிரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு, சோனியா, ராகுல்காந்தி போன்றவர்களையும் சந்திக்காமல் சென்னை திரும்பி இருக்கிறார்.
முதல்வரின் டெல்லி விசிட் என்ன பலனைத் தந்திருக்கிறது அல்லது தரப்போகிறது என்பதைப் பற்றி குறைந்த பட்சம் அறிக்கை வாயிலாக முதல்வர் விஜய் தான் தெரிவிக்க வேண்டும்.