பெண்களிடம் இப்படி ஒரு எதிர்வினை!

செய்தி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நான்கு கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்!

– உரிமையாளரை விரட்டி தாக்கியதால் பரபரப்பு.

கோவிந்த் கமெண்ட்:

மதுவிலக்குப் பற்றி தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேசியிருக்கிறார்கள்.

ஆனால், வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மக்கள் கருத்தைக் கேட்டபோது மதுவிலக்குப் பற்றி நேரடியாக கருத்துச் சொன்ன பெண்களும் இருக்கிறார்கள்.

தற்போது இந்தப் பெண்கள் நேரடியாக களத்தில் புகுந்து எந்த அளவுக்கு எதிர்வினை ஆற்றியிருப்பது, மதுபானத்தை விநியோகிக்கிறவர்களுக்கும் தயாரிப்பவர்களுக்குமான எச்சரிக்கையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

#மதுவிலக்கு #மதுபானம் #மதுபாட்டில் #மதுக்கடை #பெண்கள் #தர்மபுரி #பென்னாகரம் #சட்டவிரோதமதுவிற்பனை #தமிழ்நாடு #சமூகநீதி #Prohibition #Alcohol #Liquor #AlcoholBottles #LiquorStore #Women #IllegalLiquor #Dharmapuri #Pennagaram #AlcoholSelling

You might also like