தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

தமிழ்நாட்டின் 2026 சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அளித்துள்ள விளக்கத்தில்.

* தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

* தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

* 14.59 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

* வாக்குப்பதிவு மையங்களுக்கள் மொபைல் எடுத்து செல்ல முடியாது.

* தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.

* 4 கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

* தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 65 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்.

* பிரச்சனைக்குரியதாக கண்டறியப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* காவல்துறையினர் மட்டுமின்றி 300 கம்பெனி துணை ராணுவப்படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

* தமிழகம் முழுவதும் ரூ.1,262 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், மதுபானம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனக் கூறியுள்ளார்.

You might also like