வரலாற்றில் மறக்க முடியாத பல மக்கள் சேவைகளை ‘விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம்’ (VTMS) தொடர்ந்து செய்து வருவது அறிந்ததே.
வனவிலங்குகளால் உயிர், உடமைகளை இழக்கும் மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை.
ஆகவே, நிவாரணம் பெற, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த, தனி சட்டம் வேண்டும் என VTMS தொடங்கிய திட்டத்தை அகில இந்திய அளவில் குறிப்பாக 19 மாநிலங்களில் உள்ள அமைப்புகள் பின்பற்றி ஒருங்கிணைத்து இருக்கிறோம்.
இதன் கூட்டங்கள் பல இடங்களில் நடத்தினோம்.
கடந்த 2025 டிசம்பரில் நடந்த நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் சமயத்தில், நாடாளுமன்க்ற கூட்டத்துக்கு அருகில் Delhi Constitution Club கிளப்பில் Farmers and Forest Dwellers Parliament என்ற அமைப்பை ஏற்படுத்த மாபெரும் விவாதத்தை நடத்தினோம்.
இதில் 19 மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் கலந்து கொண்டது. திரு துரை வைகோ MP உட்பட, பல MP க்கள், மூத்த வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, வனவிலங்கு பிரச்சனைகளை அணுகும் ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு புவனேஸ்வர் தாளித் (அசாம்) அவர்களைச் சந்தித்து நீண்ட விவாதம் நடத்தியதோடு, அரசு செயலாளர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பல கூட்டங்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் தேசிய ஆய்வரங்கம்:
கடந்த 2026 ஜூலை 21 to 23 வரை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 17 மாநிலங்களை ஒருங்கிணைத்து வனவிலங்கு மோதலைத் தடுப்பது குறித்தும், நிவாரணம் பெற புதிய சட்டத்தைக் கொண்டுவருவது குறித்தும் விரிவான ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ஒரிசா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வுக்கு திரு M.S. செல்வராஜ், திரு P.T. ஜோன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கூடலூர் தொகுதி MLA திரு திராவிட மணி, கூடலூர் DMK நகரச் செயலாளர் திரு இளஞ்செழியன் மற்றும் கேரளா, கர்நாடகா MLA க்களும் கலந்து கொண்டனர்.
இரண்டாவது நாள் டெல்லி ஜந்தர் மந்தில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து திருவனந்தபுரம் நகரில் பேரணி நடத்தப்பட்டது.
இரவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள், இளைஞர்கள், ஆதிவாசிகள், தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் பற்றி பேசியதோடு, வனவிலங்கு பிரச்சனையை தீர்க்க, புதிய சட்டத்தைக் கொண்டுவர வலியுறுத்தினர்.
கேரள முதலமைச்சர் உடன் VTMS தலைவர்கள் :
கேரள முதல்வர் மாண்புமிகு V.D. சதீசன் அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், VTMS மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் நேரடியாக சந்தித்து, வனவிலங்குப் பிரச்சனைக்கு தீர்வுகாண தனிச் சட்டம் கொண்டு வருவது பற்றி கோரிக்கை வைத்தோம்.
கோரிக்கைகளை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார்.
அப்போது அவருக்கு M.S. செல்வராஜ் எழுதிய ‘மலையக தமிழர்களின் வீர வரலாறு’ (ஆங்கிலப் பதிப்பு) நூல் வழங்கப்பட்டது.

அப்போது VTMS தலைவர்களுடன் மீனவத் தலைவர்கள் தோழர் சுகன்யா, திரு யோகநாதன் மற்றும் டேன்டீ மக்கள் வாழ்வாதார முன்னனி தலைவர்கள்,
திரு வீர செல்வம், திரு சந்திரமோகன் மற்றும் VTMS திரு இராஜேந்திரன், திருஇராதாகிருஷ்ணன், திரு ரகுபதி, திரு சுரேஷ், திரு கார்த்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அந்தச் சந்திப்பின்போது நடைபெற்ற ஆலோசனையில், டெல்லியில் தொடர் செயல்பாட்டில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
– M.S. செல்வராஜ்


