தமிழகத்தில் டெங்கு: மறைக்காமல் நடவடிக்கை எடுங்கள்!

செய்தி:

தமிழகத்தில் டெங்கு பாதிப்பைக் குறைக்க உடனடி நடவடிக்கை; கண்காணிப்பு, தடுப்பு முறைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்: 

தமிழகத்தில் டெங்கு மட்டுமல்ல பல்வேறு வியாதிகள் பரவுகிற போதும் அது குறித்த உண்மையான செய்திகளை மறைத்து, தமிழகம் ஆரோக்கியமாக இருப்பதாகவே ஒரு கருத்தியலை உருவாக்குவதில் ஆளுகின்ற எந்தக் கட்சியுமே முனைப்பாக இருக்கின்றன.

இதில், அதிமுக, திமுக என்கின்ற பாகுபாடு இல்லை. தற்போது அதே நிலைதான் டெங்கு காய்ச்சல் பரவலுக்கும் பொருந்தும்.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கையில் அதற்கான சரியான நிவாரண நடவடிக்கையை வெளிப்படையாக அறிவித்து, அதற்கான நிவாரண வேலைகளை தமிழக அரசு எடுப்பது நல்லது.

You might also like