காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும். புராணமும் அதைத்தான் சொல்கிறது.
ஆனால், இங்கு நரசிம்மர் இரண்யனோடு போர் புரியும்போது மடியில் போட்டு நகத்தால் வயிற்றைக் கிழிப்பது போல் சித்தரிக்கப்படவில்லை.
அவரது ஒரு கை இரண்யனின் குடுமியைப் பிடித்திருக்கிறது. மறு கை அவன் ஓங்கும் வாளைப் பிடித்த கையைப் பிடித்திருக்கிறது. ஒரு கை இதனைக் கண்டு முன்னேறும் பிரகலாதனைத் தள்ளி விடுகிறது.
ஒரு கையால் அவர் அவனை சிம்மம்போல் ஓங்கி அறைய முனைகிறார்.
இதற்கிடையில் இரண்யன் நரசிம்மரின் மர்மஸ்தானத்தில் தனது கால் முட்டியால் தாக்க முனைகிறான்.
ஆனால், அவன் தாக்குவதற்கு முன் நரசிம்மரின் கால் முட்டி இரண்யனின் மர்மஸ்தானத்தைத் தாக்கி விடுகிறது.
இத்தகைய அபார கலைச் சாதனை மணற்கல்லில் படைக்கப்ப்ட்டிருப்பதால் மழையில் கரைந்து கொண்டே வருகிறது.
தமிழன் இது குறித்தெல்லாம் கவலையற்று, வெந்து போன மீனைப் போல சொரணையற்று வாழ்ந்து வருகிறான்.
விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய்?
கலை விமர்சகர் இந்திரன் முகநூல் பதிவு



