போரைத் துவக்கி விட்டு, சாவகாசமாக சமாதானமா?

செய்தி:

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டம்: ஏற்க மறுத்து கடும் நிபந்தனைகள் விதித்தது ஈரான்.

கோவிந்த் கமெண்ட்:

ட்ரம்ப் தற்போது அறிவித்திருக்கிற 15 அம்ச திட்டம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

இந்தப் போர் எதனால் துவக்கப்பட்டது? துவக்கியது யார்? முதலில் பாதிக்கப்பட்ட நாடு எது? என்பதை ட்ரம்பால் சொல்ல முடியுமா?

ஈரான் மாதிரியான நாட்டிற்குள் நுழைவதற்கு வெவ்வேறு காரணங்களை முன்வைத்து, நுழைந்து, அந்த நாட்டுக்குள் பேரழிவை ஏற்படுத்தி, அவர்களே எதிர்வினை ஆற்றுகிற கட்டாயச் சூழ்நிலையும் ஏற்படுத்திவிட்டு, தற்போது கடைசியில் நல் உபதேசமாக 15 அம்ச திட்டத்தை செயல்படுத்தச் சொல்வதை  எப்படி ஈரானால் ஏற்றுக் கொள்ள முடியும்?

ஈரான் மட்டுமல்ல, மற்ற எந்த நாடுதான் ஏற்றுக்கொள்ளும்?

You might also like