விஜய் கனவு காண்கிறாரா?

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

செய்தி:

தமிழகத்தில் தனித்து நின்றும் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கனவு காணுவதற்கு அனைவரும் உரிமை உண்டு. அதேபோல், விஜய்யும் கனவு காண்கிறார்.

– தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

கோவிந்த் கமெண்ட்:

2 ஆண்டுகளுக்கு முன்பு தவெகவை ஆரம்பித்து, முதல் கூட்டத்திலேயே கூட்டணி ஆட்சியில் பங்கு என்று அறிவித்து, பல்வேறு கனவுகளைக் கண்டு இறுதியாக இப்போதுதான் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் களம் காண முனைந்திருக்கிறார் விஜய்.

தமிழிசை சொல்கிறபடி, விஜய் இப்போது கனவு காணவில்லை. இப்போது தான் அசலான பலத்தை தெரிந்து கொள்வதற்கான பரீட்சையில் இறங்கி இருக்கிறார். அதுவும் சொந்தக்காலில் நின்று ஜெயிக்க முனைந்திருக்கிறார்.

அந்த எதார்த்தமே பெரிய கனவல்லவா?

You might also like