நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பா?

செய்தி:

“நல்லவர்களுக்கு வாக்களித்தால் மாரடைப்பு வராது”!

– திருச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பதாகையில் எழுதப்பட்ட வித்தியாசமான வாசகத்தால் சுவாரசியம்.

கோவிந்த் கமெண்ட்:

மாரடைப்பைத் தடுக்க இப்படியும் கூட வழி தருகிறார்கள்.

அண்மையில் அரியானாவில் இளம் வயதினர்கள் 40 ஆயிரம் பேர் மாரடைப்பு வந்து உயிரிழந்திருப்பதாக ஒரு செய்தி வெளிவந்து சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அரியானாவிலேயே இந்த அளவுக்கு மாரடைப்பு என்றால், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் மாரடைப்பு வந்து உயிரிழந்திருப்பார்கள்.

தேர்தலின்போது நல்லவர்களைத் தேடுவது சிரமம்தான். அதற்காக மாரடைப்புடன் எல்லாம் ஒப்பிட்டு பிரஷரை அதிகரிக்கக் கூடாது.

 
You might also like