இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!

நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.

அந்த ஆய்வுத் தொடர்பான புத்தகம்தான் ‘மௌன வசந்தம்’.

ராபின் பறவை அழிந்தது. மனிதர்களைப் பல்வேறு நோய்கள் தாக்கின.

அவரது ஆய்வுகளை அடுத்து அமெரிக்காவில் பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அறுபதுகளில்தான்,

இந்தியாவில் அதே பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்ட “பசுமைப் புரட்சி”யை நமது அரசு மிகப் பெரிய அளவில் முன்னெடுத்ததைத் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் பூச்சிக் கொல்லிகள் 50 ஆண்டுகளாக இன்றும் நமது வயல்களில் தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இயற்கையின் நியதியில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால், ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நூலின் சாரம்.

“லட்சக்கணக்கான வாசகர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல் இது.”

சு.தியடோர் பாஸ்கரன், சூழலியல் எழுத்தாளர்

You might also like