செய்தி:
அதிமுகவில் பதவி நீக்கப்பட்ட 400 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்!
– பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கடிதம்.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவை பொறுத்தவரை தற்போது நிலையாமைதான் நிலையாக இருக்கிறது.
இன்று இருப்பவர் நாளை இதே கட்சியில் இருப்பாரா என்கிற அளவுக்குக் குழப்பம் தலைவர்களுக்கும் இருக்கிறது, அதிலுள்ள தொண்டர்களுக்கும் இருக்கிறது.
அதுபோலத்தான் அண்மையில் நீக்கப்பட்டவர்களே மறுபடியும் இணைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.