சமூக சீரழிவுக்குக் காரணம் யார்?

செய்தி:

கொலை, தற்கொலை, உயிரிழப்புகள் ஏற்பட மது-கஞ்சாவை திமுக அரசு கட்டுப்படுத்தத் தவறியதே காரணம்!

– அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

மருத்துவராக அன்புமணி ராமதாஸ் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானவைகள்தான்.

தற்போது அதிர்ச்சித் தரக்கூடிய விதத்தில் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பாலியல் குற்றங்களின் பின்னணியில் இருந்தவர்கள் இளைஞர்களும் இருக்கிறார்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கான தூண்டுதல், பொதுவெளியில் தாராளமாகக் கிடைக்கும் விதவிதமான போதைப் பொருள்கள் மிக முக்கியக் காரணம்.

அதையும் பரவ அனுமதித்து விட்டு, அதன் பின்விளைவுகளான பல்வேறு பாலியல் கொலைக் குற்றங்களை மட்டும் தனித்து தடுத்து நிறுத்திவிட முடியாது.

இது மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இதே அளவுகோல் பொருந்தும்.

You might also like