செய்தி:
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு தனி ஒதுக்கீடு!
– மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீடு வழங்கும்முறை அண்டை மாநிலங்களில் மிக இயல்பாக நடந்தேறி இருக்கிறது.
ஆனால், மொழிக்காக போராட்டம் நடந்த தமிழகத்தில் இத்தகைய ஒதுக்கீடு இயல்பாக ஏனோ நடக்கவில்லை.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக எழுப்பியிருக்கும் இந்தக் கோரிக்கையை, அடுத்து ஆட்சிக்கு வரும் எவரும் பரிசீலிப்பது தமிழகத்திற்கும் நல்லது, தமிழர்களுக்கும் நல்லது.