ஈரானில் தொடரும் அத்துமீறல்கள்!

செய்தி:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் செய்யது மஜித் இப்னு அல்-ரெசா படுகொலை.

கோவிந்த் கமெண்ட்:

கடந்த சில நாட்களாக ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்தும் போரில், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு அங்கு ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற ஈரானின் பாதுகாப்பு அமைச்சரான செய்யது மஜித் இப்னு அல்-ரெசா பதவியேற்றதுமே கொல்லப்பட்டிருக்கிறார்.

ஈரானில் உள்ள வெவ்வேறு ராணுவத் தளங்கள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள் என்று போர்க்கால அடிப்படை விதிகளை மீறிய தாக்குதல்கள், பல நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா தலைமையின் கீழ் நடக்கும் இத்தகைய தாக்குதல்களை யார் தடுத்து நிறுத்துவது என்கிற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளோ, சர்வதேச மனித உரிமை அமைப்புகளோ இதுவரை தலையிட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

இஸ்ரேலும் தன் பங்கிற்கு அல்லது தன்னை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், இந்தப் போரின் விளைவாக எரிபொருட்களின் விலை கூடி, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பல பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு விலையேற்றத்தைக் கண்டிருக்கின்றன. பங்குச் சந்தை தடுமாறுகிறது. தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கிறவர்கள் மனம் பதறாமல் பார்க்கமுடிவதில்லை.

இவற்றுக்கான குறைந்தபட்ச தீர்வுக்கான முன்னெடுப்பை யார் எடுக்கப் போகிறார்கள்? எப்போது அமைதியான அந்த சூழல் உருவாகும்?.

You might also like