செய்தி:
இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கோவிந்த் கமெண்ட்:
சில மாதங்களுக்கு முன்பு ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு, “போகப் போகத் தெரியும்…” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
தற்போது மிகவும் கஷ்டப்பட்டு, “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…” என்கிற பாடலை பாட வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார் ராமதாஸ்.