வித்தியாசமான விஜய் ரசிகர்கள்!

செய்தி:

ஈரோடு மாவட்டம் பூனாச்சி முகாசிப்புதூர் அருகே நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தவெக கொடியுடன் அலகு குத்தி வந்த பக்தர்.

கோவிந்த் கமெண்ட்:

வழக்கமாக இது முருகனுக்காக சீசன். இந்த சீசனில்தான் விதவிதமான காவடி எடுப்பார்கள். அலகு குத்துவார்கள்.

அந்தவகையில் முருக பக்தர்களின் பாணியில், அதிலும் ஈரோட்டில் விஜய் மீது கொண்டிருக்கிற அதீத பக்தியில், பக்தர் ஒருவர் தவெக கொடியுடன் அலகு குத்தி இருக்கிறார்.

முன்னதாக ஐயப்ப பக்தர்கள் தவெக கொடியுடன் மலைக்குச் சென்றதும், பக்தர் ஒருவர் தவெக கொடியுடன் தீ மிதித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.

தவெகவுக்குத்தான் எத்தனை விதமான தொண்டர்கள்.

 
You might also like