ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆண்களுக்கான 10-வது டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி நடக்கவுள்ள இந்தப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

இந்தத் தொடரில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என அனைவரும் நம்பிக்கையுடன் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.

அவருடைய நம்பிக்கை மட்டும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எண்ணங்களும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

You might also like