செய்தி:
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி வரியை உயர்த்தியோ, குறைத்தோ பல நாடுகளைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபரான டிரம்ப்.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பாணியில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க உச்சநீதிமன்றமே டிரம்ப் விஷயத்தில், அவரது தலையில் பலமாகக் குட்டி, இறக்குமதி வரியை 10 சதவிகிதமாகக் குறைத்திருந்தது. உலக நாடுகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தன.
தற்போது மறுபடியும் தன்னுடைய பழைய பாணிக்கே சென்று வரியை உயர்த்தியிருக்கிறார் என்றால் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்ன மதிப்பு கொடுக்கிறார் டிரம்ப்.