செய்தி:
கோவிந்த் கமெண்ட்:
திமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதும் முதலில் கூட்டணிக்குப் பேச வந்தவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரான காதர் மொய்தீன்.
கூட்டணி எண்ணிக்கைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்தபிறகு அவர் சட்டென்று மயங்கியது சில தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியானது.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இப்படி ஒரு பின்விளைவா என்று யோசிப்பதற்குள் கூட்டணிப் பற்றி நேரடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச வந்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் தனித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் என்னதான் முடிவெடுக்கப் போகிறது என்பதிலேயே ஒருவித சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமை சொன்னபடி காங்கிரசின் அடுத்தகட்டத் தலைவர்கள் வாயைமூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.