செய்தி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை தாக்கல் செய்த பிறகு எழுந்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது, “தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன கிடைத்திருக்கிறது” என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்திருக்கிறார்.
“நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்தபடி பட்ஜெட் உரையை வாசித்து, எவ்வளவு பெருமை சேர்த்திருக்கிறார் என்பதை கவனிக்க மாட்டீர்களா?”
கோவிந்த் கமெண்ட்:
சீனாவில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது.
விரல் சந்திரனைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், பலர் சுட்டிக்காட்டும் திசையைப் பார்க்காமல், சுட்டிக் காட்டும் விரலைப் பார்க்கிறார்கள்.
அதைப்போலவே பட்ஜெட்டில் என்ன பலன் என்று கேட்டால், காஞ்சிபுரம் பட்டின் மகிமை பற்றியை பேசிக் கொண்டிருக்கிறார் தமிழிசை.
பட்ஜெட்டின் பலனைப் பற்றி எதுவுமே சொல்ல இயலாத நிலையில் இவர்களால் இப்படித்தான் பேச முடியும்.