செய்தி:
டெல்லியில் ராகுல்காந்தியுடன் கனிமொழி திடீர் சந்திப்பு.
திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆலோசனை.
கோவிந்த் கமெண்ட்:
இதற்கு முன்பும் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடித்திருந்தாலும் இம்முறை எதனாலோ காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதிப்படுவதற்கு முன்பே சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன.
விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா என்று காங்கிரசுக்குள்ளேயே குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மிகச்சரியாக மொழிப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், ‘பராசக்தி’ படத்தை இன்பநிதி ஸ்டாலின் எடுத்து பல தடைகளைக் கடந்து வெளிவந்தபோது, காங்கிரஸில் அதற்கும் எதிர்ப்புக் குரல்கள் கேட்டன.
காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளரே இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என்று ஆதங்கத்துடன் சொல்ல வேண்டி ஆகிவிட்டது.
பல நெருக்கடிகள் உருவான நிலையில்தான், திமுக துணைப் பொதுசெயலாளரான கனிமொழி டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
அவர்கள் என்ன பேசினார்கள்?
காங்கிரஸின் கூட்டணி நிபந்தனைகள் தான் என்ன?
கூட்டணி ஆட்சி என்பதை ராகுலும் வலியுறுத்தும் மனநிலையில் இருக்கிறாரா?
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விடுத்த அழைப்பு செல்லுபடியாகுமா?
இதற்கெல்லாம் இருவர் தரப்பிலும் பதில் வந்தபிறகே, கூட்டணியை உறுதிப்படுத்த முடியும்.