வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்!

 தொ. பரமசிவன்

மதுரைதான் தமிழர்களுடைய பண்பாட்டுத் தலைநகரம். மதுரையைச் சுற்றித்தான் தமிழர்களுடைய வேர்களெல்லாம் பரவிக்கிடக்கிறது.

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று கேட்டால் சுருக்கமாகச் சொல்லுங்கள். நாம் வேர்களைத் தேடிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு பெரிய உயிர்ப்பொருளானாலும் இந்த ஆலமரமானாலும், வருகிற வழியிலிருக்கிற பனைமரமோ எந்த மரமோ வெளியே தெரிகிற தோற்றத்தில் அல்ல, அது உயிரோடு இருக்கிறது.
கீழே இருக்கிற வேர்களாலேதான் அது நின்று கொண்டிருக்கிறது.

அதுபோல நாம் எதன்மீது நின்றுகொண்டிருக்கிறோம்.

நம்முடைய பண்பாட்டு வேர்களின் மீது நின்றுகொண்டிருக்கிறோம். இந்தப் பண்பாட்டைத் தேடிய பயணத்தில் ஒன்றுதான் இந்த நடைப்பயணமெல்லாம்.
 
– 2013 ஆகஸ்ட் 25, பசுமை நடை விருட்சத் திருவிழாவில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப. பேசியதிலிருந்து.
You might also like