செய்தி:
குற்றம் செய்தால் தண்டனை என்ற உணர்வு சமூகத்தில் வளர வேண்டும்!
– டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கைரேகை மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை.
கோவிந்த் கமெண்ட்:
உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர் அளவில் தோன்றிய கருத்தை முன்வைத்திருக்கிறார்.
ஆனால், எத்தனையோ குற்றங்கள் நடந்தாலும், அந்தக் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை உரிய காலத்தில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிறதா?
குற்றத்திற்கும் தண்டனைக்குமான நீண்டகால இடைவெளி அமலில் இருக்கும்போது, அந்த காலதாமதத்தை எப்படி எடுத்துக்கொள்வது?