ஓபிஎஸ் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறியதற்கு யார் காரணம்?

செய்தி:

“பிரதமரை சந்திக்க முடியாமல் போனதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை”

– நயினார் நாகேந்திரன் பேட்டி

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவினருக்கும், சில அதிமுக தலைவர்களுக்கும் கூட ‘கிட்டப்பார்வைக் கோளாறு’ இருக்கும்போலிருக்கிறது.

ஓபிஎஸ் அருகில் இருந்தபோதும், அவரையும் கண்டுகொள்ளவில்லை. அவர் செல்போன் வழியாக அனுப்பிய குறுஞ்செய்தியையும் கண்டுகொள்ளவில்லை. 

மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களைச் சேர்த்ததில் பேர் பெற்ற தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் முதலில் உண்மையைப் பேச வேண்டாமா?

You might also like