நினைவலையில் ‘மதராசப்பட்டினம்’ – 1
1881-ம் ஆண்டில்தான் முதல் எக்ஸ்சேஞ்ச், பிளிக்கர்ஸ் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. 1910-ம் வருடத்தில் தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 350ஆக இருந்தது.
அந்த நாட்களில் ஐரோப்பாவில்கூட அதிகமானவர்கள் தொலைபேசி வைத்திருக்கவில்லை.
பழைய ‘மாக்னடோ’ தொலைபேசிகள்தாம் அப்போது இருந்தன. 1900-ம் வருட ஆரம்பத்தில் இந்த எக்ஸ்சேஞ்ச் எர்ரபாலு தெருவுக்கு மாற்றப்பட்டது.
1922-ம் வருடத்திலிருந்து தொலைபேசி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. தொலைபேசி வாடிக்கையாளர்கள் இந்த வருடத்தில் 1300ஆக உயர்ந்திருந்தனர்.
1925-ம் வருடம் எஸ்பிளனேடில் டெலிபோன் ஹவுஸ் (தொலைபேசி நிலையம்) கட்டப்பட்டது. 1926-ல்தான் தொலைபேசி முறை ‘ஆடோமேடிக்’ ஆனது.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தியாவிலேயே முழுதும் தானியங்கியாகச் செயல்பட்ட முதல் ‘எக்சேஞ்ச்’ மதராசில்தான்!
பார்க்கப்போனால், உலகின் பல சிறந்த நகரங்களில் இந்த விஷயத்தில் மதராஸ் முன்னோடியாக இருந்தது.
– நரசய்யா எழுதிய ‘மதராசபட்டினம்’ நூலிலிருந்து…