வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் உருவாகக் காரணமாகின்றன.
அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி (Nature’s Law) தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் (Cause and Effect) புரிவதில்லை.
தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை.
இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.
அறிவின் குறைபாட்டால் (Knowledge Deficiency) சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை.
பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.
– வேதாத்திரி மகரிஷியின் ‘மனவளக் கலை’, தொகுப்பு-2 நூலிலிருந்து…