தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா?

தூய இலக்கியவாதி கிரைம் நாவல் எழுதலாமா?
”தவறு இல்லை” என்கிறார் மேன் புக்கர் விருது பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பேன்வில்.
JOHN BANVILLE என்ற பெயரில் உன்னதப் படைப்புகளைச் செய்கிற கலைநயம் மிக்க ஐரிஷ் எழுத்தாளரான இவர், BENJAMIN BLACK எனும் மற்றொரு பெயரில் துப்பறியும் கதைகள் எழுதுகிறார்.
தமிழ் இலக்கியச் சூழலில் இது சாத்தியமா? சுந்தர ராமசாமியும், ராஜேஷ்குமாரும் ஒரே மனிதர்தான் என்றால் ஏற்றுக் கொள்வார்களா? ஐரிஷ் இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறது.
மிகச் சிறந்த கதைசொல்லியான சுஜாதாவையே வணிக எழுத்தாளர் என்று பேசுகிறது தமிழுலகம்.
2010 செப்டம்பர் 21 புதன் கிழமை நான் ஜான் பேன்வில்லை அயர்லாண்டின் டப்ளின் நகர இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்தேன். எட்டு யூரோ (550 ரூபாய்) கொடுத்து அவரது நேர்காணல் ஒன்றில் பங்கு கொண்டேன். கேள்வி நேரத்தில் அவரிடம் கேள்வி கேட்டேன்.
“இலக்கியம் செய்யும் ஜான் பேன்வில், கிரைம் நாவல் எழுதும் பெஞ்சமின் பிளாக் ஆகிய இருவரில் யார் நிஜம்? யார் நிழல்?”
”இருவருமே நான்தான். (ஜான் பேன்வில் இலேசாக முறுவலித்துக் கொண்டார்.) வசந்தகால டப்ளினும், இலையுதிர்கால டப்ளினும் போல இருவருமே நிஜம். கோடை எனக்கு பிடிக்காது. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பேன்.
அப்போது சுமார் மூன்று மாத காலத்தில் எனது கிரைம் நாவலை கம்ப்யூட்டரில் எழுதி முடிப்பேன். ஆனால் என் இலக்கிய ரீதியான படைப்புகளை கம்ப்யூட்டரில் என்னால் எழுத முடியாது.
மை நிரம்பிய பேனாவில் மட்டுமே எழுத முடியும். இதற்குக் கால வரையறை இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் பரிசீலித்து எழுதுவேன்..”
இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?
– எழுத்தாளர் இந்திரன் முகநூல் பதிவு
You might also like