ஒரே புகைப்படம்: 5000 சிம் கார்டுகள்!

தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம்

தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

எத்தனை நபர்களின் அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் எவ்வளவு போலியான சிம் கார்டுகள் இயங்கி வருகின்றன என்பது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 20,000 செல்போன் எண்களை சமீப காலங்களில் முடக்கியுள்ளதாகவும், மேற்கொண்டு முடக்க முயற்சித்து வருவதாகவும் மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like