இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5, 785 கோடி.

இன்னும் சில மாநிலங்களில் மனுத்தாக்கல் தொடங்காததால், இன்றைய தேதியில், இவர் தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார்.

ஆந்திராவின் ஒஸ்மானியா பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்த சந்திரசேகர், மேல்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். நல்ல மதிப்பெண் பெற்றார். அமெரிக்காவிலேயே டாக்டர் தொழில் ஆரம்பித்தார்.

பின்னர் அந்த நாட்டிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை தயார்படுத்தும் ‘கோச்சிங் சென்டர்‘ ஆரம்பித்தார்

அதில் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது.

லாலு மருமகனும் போட்டி

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் இரு மகள்கள்  மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்தநிலையில் அவரது மருமகனும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவரது பெயர் தேஜ் பிரதாப் யாதவ். லாலுவின் மகளை திருமணம் செய்துள்ள தேஜ், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் தம்பி ரத்னம் சிங்கின் பேரன் தான், தேஜ் பிரதாப். முலாயம் சிங்கும் பேரன்.

கன்னாஜ் தொகுதி, சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

அந்தத் தொகுதியில் முலாயம் சிங் யாதவ்,  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், அவரது மனைவி டிம்பிள் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

– பி.எம்.எம்.

You might also like