ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

– அரசியல் குறித்து பேசியதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி – ரஜினிகாந்த் 40 நிமிடங்கள் நடந்தது. 

இதையடுத்து இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த், “நான் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன். நமது ஆன்மீக உணர்வு அவரை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முதலில் தமிழ், தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் என்னிடம் கூறினார்.

அரசியல் பற்றியும் ஆளுநருடன் விவாதித்தேன், அது பற்றி இப்போது பகிர முடியாது. மீண்டும் அரசியல் வரும் திட்டமில்லை. ஜெயிலர் படப்பிடிப்பு 15-ம் தேதி அல்லது 22-ம் தேதி துவங்கும்” எனக் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது பற்றியெல்லாம் உங்களிடம் பேச முடியாது. நன்றி” என்றார்.

அதேபோல், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு குறித்து கேட்டதற்கு,சற்று யோசித்து பதில் ஏதும் சொல்லாமல் பின்னர் ‘கருத்து கூற விரும்பவில்லை’ என்று மறுத்துவிட்டார். 

You might also like