‘உடன்பிறப்பே’ என்னும் உயிர்ச்சொல்!

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவைப் பகிரும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில்,

“மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே. உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற மனத்துணிச்சலோடுதான் கட்சியையும், ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் விழியின் ஒளியில் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் வழியில் எங்கள் கால்கள் செல்கின்றன.

‘உடன்பிறப்பே’ என்ற உயிர்ச்சொல்லில் நாங்கள் உயிர் வாழ்கிறோம். கலைஞரே வாழ்க. தலைவரே வாழ்த்துக” எனப் பதிவிட்டுள்ளார்.

You might also like