முடிவெடுப்பதில் ஏன் இந்த தயக்கமும் தாமதமும்?

செய்தி:

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு.

கோவிந்த் கேள்வி: 

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தடை செய்ய முயற்சி பண்ணினாங்க… ஆளுநருக்கு அனுப்பி வச்சாங்க… இப்போ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை பத்தி ஆய்வு செய்ய தனி குழுவே அமைச்சாங்க…

அந்தக் குழுவும் அறிக்கையை சமர்ப்பிச்சாச்சு… ஆனால் இன்னமும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து சிலர் உயிர் இழக்கும் செய்திகள் வந்துட்டே தான் இருக்கு…

அதேசமயம் இதே சூதாட்டத்தை ஊக்குவிக்கிற விளம்பரங்களும் வந்துட்டே தான் இருக்கு. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் ஏன் இந்த தாமதம்.

ஏற்கனவே ஜெயலலிதா தலைமையிலான அரசு லாட்டரி சீட்டுக்கு தடை விதித்தபோது எடுத்த திடமான முடிவைப்போல தற்போது முடிவெடுப்பதில் ஏன் இந்த தயக்கமும் தாமதமும்?

You might also like